மேஷம் பொதுப்பலன்கள்: உங்கள் பொறுப்புகளை திறமையாக செயலாற்ற திட்டமிடுதல் அவசியம். பொறுமை காப்பது நல்ல பலனைத் தரும். விரைவாக முடிவெடுக்க முனைவீர்கள். இந்த உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். மேஷம் வேலை / தொழில்: இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். நீங்கள் திறமையான முறையில் பணியாற்ற பணிகளை நன்கு கையாள வேண்டும். முன்கூட்டி திட்டமிட்டால் செயலில் வெற்றி பெறலாம். மேஷம் காதல் / திருமணம்: உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். மனம் திறந்த பேச்சும் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலமும் நல்ல பலன்கள் கிடைக்கும். மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பணம் குறைந்து காணப்படும். குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். பணத்தை சேமிக்க இயலாது. மேஷம் ஆரோக்கியம்: தோள்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சி உதவிகரமாக இருக்கும். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/mesham/