Skip to main content

Posts

Showing posts with the label சோமவார விரதம்

கார்த்திகை சோமவார விரதம் தரும் பலன்கள்

நமது இந்து மத  கலாசாரத்தில் ஆன்மீக ஈடுபாடும் அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் அசைக்க முடியாத ஒன்று ஆகும். இறைவழிபாடும், விசேஷமான தினங்களில் விரதம் கடைபிடிக்கும் முறையும்  மக்களால் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. அது போல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. கடவுளுக்கு மட்டுமன்றி நவகிரகங்களுக்கும் சிறப்பு உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாதம் நவகிரகங்களில்  ஒன்றாகத் திகழும்  சந்திரனுக்கும் உகந்த மாதமாக கருதப்படுகின்றது. சந்திரனுக்கு பெருமை சேர்த்த சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக போற்றப்படுகின்றது. மேலும் அந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான நாட்கள் ஆகும். கார்த்திகை சோமவார விரதம் சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமையில் இந்த விரதம் வருவதால் இது கார்த்திகை சோமவாரம் என்று அழைக்கப் படுகின்றது. பொதுவாகவே திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் சிவபெருமான், ...