Skip to main content

Posts

Showing posts from February, 2020

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி சிவபெருமானுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ள புண்ணிய தினம் ,  மகா சிவராத்திரி ஆகும்.  சிவ பூஜை செய்வதற்கும் ,  அவரை வணங்கி ,  மகிழ்வித்து ,  அவரிடமிருந்து வரங்கள் பல பெறுவதற்கும் மிகவும் ஏற்ற நாளாக இது விளங்குகிறது.   சிவனுக்குரிய இரவுப் பொழுதாகிய மகா சிவராத்திரி என்பது ,  பல நன்மைகளை நமக்கு அளிக்க வல்லது. மிகப் புனிதமான அன்றைய இரவுப் பொழுதில் சிவ வழிபாடு செய்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். காலப்போக்கில் ,  அவர்களுக்கு மோசமும் கிடைக்கும் என புனித நூல்கள் கூறுகின்றன.   சிவராத்திரி என்பது ,  மாதாந்திர நிகழ்வாகும். இது ,  ஒவ்வொரு தேய்பிறை ததுர்தசி நாளிலும் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மாதமாகிய மாசியில் வரும் இது போன்ற சிவராத்திரி நாள் ,  மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. இது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நிகழ்கிறது. அன்று நாடெங்கும் ஏராளமான மக்கள் ,  சிவ ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து ,  சிவபெருமானை வழிபடுகிறார்கள்.      மகா சிவராத்திரி மகிமை சிவபெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் ,  திருவிளையாடல்கள் பலவும் சிவராத்திரி  காலத்தில் தா