பொதுப்பலன்கள்
இந்த மாதம் கும்ப ராசிக்குச் சிறப்பான பலனை அளிக்கக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் தெளிவான நடவடிக்கைகள் சிறந்த பலன்களைக் கொடுக்கும். நீங்கள் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சில நேரங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்படக் கூடியவராக இருப்பீர்கள். சவாலான வேலைகளை எடுத்துக் கொள்ள தயாராகுங்கள், இது உங்கள் திறமைகளை வெளிக்காட்ட உதவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. அடிக்கடி செல்லும் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் சமூக வாழ்க்கை பயனுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கும். சிக்கல்களைத் விரைவாக தீர்க்கும் வலுவான ஆலோசகராக மாறுவீர்கள். நிதி ஆதாயம் கண்டு மகிழ்வீர்கள். உங்கள் குடும்பத்திற்காக சில ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள்..உங்களுடைய ஆரோக்கிய நிலை வலுவாக இருக்கும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/kumbam/காதல் / திருமணம்
இந்த மாதம் உங்களின் உண்மையான உணர்வுகள் காதலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உறவை நிலையைச் சிறப்பாக பராமரிப்பீர்கள். நீங்கள் அன்பானவர்களுடன் நம்பகமான உறவைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் திருப்தியடையும் வகையில் புதிய பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவீர்கள். தம்பதிகள் வளமான வாழ்வைப் பெற்று அதிக மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/kumbam/நிதி நிலைமை
இந்த மாதம் நிதியில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு உங்களை வலுவாக வைக்கும். உங்களுடைய உறவினர்களுக்கு பண உதவி செய்வீர்கள். பணத்தை அவர்களிடமிருந்து திரும்பப் பெறும் தேதியையும் கேட்டுப் பெறுவீர்கள். பணத்தை தனியாகக் கையாளும் உங்கள் திறமை காரணமாக அனைத்து நிதி விஷயங்களையும் கையாளும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருக்கும் பண வரவுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிறு தாமதத்திற்கு பின் பணம் வந்து சேரும்.
வேலை
இந்த மாதம் சராசரி பலன்களே கிடைக்கும். குறைந்த வேலைப்பளு காணப்படும். நீங்கள் சரியாக உங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். உங்கள் வேலையில் முன்னேற்றத்தைப் பெற கூடுதல் நேரம் நீங்கள் பணி செய்ய நேரிடும். பிரச்சினைகளைத் தீர்க்கும் உங்களுடைய தனிப்பட்ட இயல்பு பாராட்டுக்குரியது. உங்கள் சக ஊழியர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களின் உதவியையும் பெற்று வெற்றியடைவீர்கள்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/kumbamதொழில்
இந்த மாதத்தில் தொழிலில் புதிய நுட்பங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும். உங்களின் வளர்ச்சி உங்கள் போட்டியாளர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.தொழிலில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பீர்கள். பெரும்பாலான நடவடிக்கைகளில் இது வெற்றியைத் தரும். உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான முறையில் சேவை செய்யுங்கள். இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தொழில் வல்லுநர்
உங்கள் தொழிலில் இந்த மாதம் படிப்படியான முன்னேற்றத்தை உங்களால் காண முடியும். நீங்கள் சரியான நேரத்தில் அனைத்துப் பணிகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தைத் ஈர்க்க முக்கிய பணிகளுக்க முன்னுரிமை கொடுப்பீர்கள். உங்கள் பணியில் சவால்களை சமாளிக்கத் தயாராகுங்கள். உங்கள் துணிச்சலான இயல்பு அனைத்துப் பணிகளிலும் வெற்றியை பெற்றுத் தரும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/rasi-palan-monthly/kumbamஆரோக்கியம்
இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியப் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் வெற்றிகரமாக விடுபடுவீர்கள். உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம் நீங்கள் மன அமைதி பெறுவீர்கள்.
மாணவர்கள்
மாணவர்கள் இந்த மாதம் படிப்பதில் மிகவும் உற்சாகத்தோடு இருப்பார்கள். உங்கள் முன்னேற்றம் உங்களுக்கு முழு திருப்தியை தரும். ஆசிரியர்கள் தரும் அறிவுரைகளைப் பின்பற்றி சிறந்த அறிவைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் வெற்றி பெற்ற நபராக மாறி உங்களுடைய நன்மதிப்பு அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள்.
சுப தினங்கள்: 4, 6, 12, 13, 14, 15, 19, 25, மற்றும் 30
அசுப தினங்கள்: 7, 11, 18, 22, 27 மற்றும் 29
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/kumbam