பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்கள் மனநிலையை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உங்களுடைய அறிவுப்பூர்வமற்ற நடத்தை காரணமாக இருக்கும். மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைத் தவறாமல் செய்யுங்கள். நீங்கள் பெரிய பிரச்சினைகளில் குழப்பம் அடைவீர்கள். பிறரிடம் ஆலோசனைகளை கேட்க மறுப்பதால் அவைகள் நிலுவையில் இருக்கும். எல்லா நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை கொடுங்கள். நிலுவையிலுள்ள பணிகளை முடிப்பதற்குக் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தொழிற்துறையில் தெளிவான வழிமுறைகளைப் பெறுவீர்கள். பெரும்பாலான நேரங்களில், சிக்கல்களைத் தீர்க்க எளிய தந்திரங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறி உணவு உட்கொள்வதால் பிரச்சனைகள் ஏற்படும்.
காதல் / திருமணம்
உங்கள் காதல் வாழ்க்கை இயல்பானதாக இருக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களில் நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள். உங்கள் துணையுடன் நம்பகமான உறவை உருவாக்குங்கள். நீங்கள் ஒரு புதிய காதல் உறவுக்குள் நுழைய வாய்ப்பு உண்டு. இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். இந்த மாதம் நீங்கள் செய்யும் செயல்களை நிதானமாகச் செய்யுங்கள்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/magaram/நிதி நிலைமை
நிதிநிலைமையில் காணப்படும் சிக்கல்கள் உங்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தலாம். உங்கள் செலவுகளை கவனமாகத் திட்டமிடுங்கள். நீங்கள் உங்கள் நிதிகளைச் சரியாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்தினால் முடியாதது என்பது எதுவும் இல்லை. உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நெருங்கிய நண்பர்களிடமிருந்து நிதி உதவியைப் பெறலாம். எனினும் உங்கள் உறவைப் பராமரிக்க பணத்தைத் திருப்பி செலுத்துவது பற்றி தெளிவாக இருக்க வேண்டும்.
வேலை
இந்த மாதம், பணியில் உங்கள் முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் நேர்மையோடு உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். நீங்கள் சில அறிவுறுத்தல்களைத் தவிர்த்து உங்கள் விருப்பப்படி செயல்படுவீர்கள். இதனால் மேலதிகாரிகள் உங்களுக்கு அழுத்தம்தர காரணமாக இருக்கலாம். அதீத நம்பிக்கையோடு இருக்காதீர்கள். அக்கறையோடும் மிகப் பொறுமையோடும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/magaram/தொழில்
தொழில் வாய்ப்புகள் இந்த மாதத்தில் மிதமான முடிவுகளைக் கொடுக்கும். உங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை கவனியுங்கள். வாய்வழி வாக்குறுதிகளைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கவும். அது நடைமுறைப் படி ஒத்துவராது. நீங்கள் பொறுப்பெடுத்துக் கொண்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் கூட்டாளர்கள் சிறந்த ஆதரவை அளிப்பார்கள். கடுமையான நேரங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில் உங்களுக்கு உதவுவார்கள்.
தொழில் வல்லுநர்
தொழில்முறை ரீதியாக உங்கள் அடையாளம் சாதாரணமாக இருக்கும். உங்கள் நடத்தையால் உங்கள் சக ஊழியர்களையோ அல்லது கீழ் பணிபுரிபவர்களையோ உதாசீனம் செய்யாதீர்கள். பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏன் என்றால் உங்கள் கீழ் பணி புரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/magaramஆரோக்கியம்
நேரம் தவறி உட்கொள்ளும் உணவால் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம். எனவே, உணவைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சிறு அசௌகரியத்தையும் அலட்சியம் செய்யாதீர்கள். சிக்கல்களிலிருந்து இருந்து நிவாரணம் பெறுவதற்கு மருத்துவரை அணுகுங்கள். தேவையற்ற பிரச்சினைகளை கொடுக்கக்கூடிய எண்ணெய் பொறித்த உணவு வகைகளைத் தவிருங்கள்..
மாணவர்கள்
மாணவர்கள் தங்கள் படிக்கும் முறையில் திருப்தி அடையாமல் இருப்பார்கள். தன்னம்பிக்கையோடும் முழு கவனத்தோடும் படிக்க வேண்டும். இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் பொது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது உங்களுக்கு உதவும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்போடு படிக்க வேண்டும்.
சுப தினங்கள்: 1 11, 18, 22 மற்றும் 23
அசுப தினங்கள்: 9, 16, 28 மற்றும் 30
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/magaram/