பொதுப்பலன்கள்
உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு இந்த மாதம் பதட்டம் நிறைந்த மாதமாக இருக்கும். உங்கள் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை நீங்கள் மேம்படுத்த வேண்டும். இல்லையெனில், விஷயங்கள் தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படலாம். உங்கள் எண்ணங்கள் இயற்கையாக இருக்கலாம் ஆனால் அதை உண்மையாக நிறைவேற்றும் போது மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கும். சமூக தொடர்புகளை பற்றி மிகவும் குறிப்பாக இருங்கள். ஏனெனில் அவர்களில் சிலர் உங்கள் நற்பெயரைக் கெடுக்கலாம். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கையையும் விருப்பங்களையும் அளிக்கும். உங்களுடைய தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். உங்கள் தகுதிவாய்ந்த நடவடிக்கைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு உதவியாக இருக்கும். உடல் நிலை இந்த மாதம் நன்றாக இருக்கும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/mesham/
காதல் / திருமணம்
இந்த மாதம், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையைத் திறம்பட கையாள முடியாது. ஆரோக்கியமான உறவைப் பராமரிக்க நீங்கள் நடுநிலை வகிக்க வேண்டும். உங்கள் காதலை தற்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் உறவுகளுக்கு உணர்வுப்பூர்வமாக மதிப்பளிக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் உங்கள் சுய நலத் தன்மையை உங்கள் துணை புரிந்து கொள்ளலாம்.
நிதி நிலைமை
நிதிநிலையைப் பொறுத்தமட்டில் இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் முதலில் உங்களுடைய முன்னுரிமை விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் நடப்பு சேமிப்பிலிருந்து நிதிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த மாதத்தில் வாய்வழி உத்தரவாதங்களைத் தவிர்க்கவும். குடும்ப அங்கத்தினருடன் நீங்கள் பொழுதுபோக்கிற்காக செலவு செய்ய நேரிடலாம். உங்கள் செலவுகளில் சில தேவையற்றதாக இருக்கும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-monthly/mesham/
வேலை
இந்த மாதம் உங்கள் வேலையைக் கவனமாக திட்டமிட வேண்டும். பெரும்பாலான வேலைகளை முடிப்பதற்குக் கூடுதல் நேரம் எடுக்கலாம். எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் உங்கள் தொடர்பு நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்களுடைய செயல்திறன் குறைவாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பணிகளில் உங்களுடைய தகவல் தொடர்பு உங்களைக் காப்பாற்றும். பணியிடத்தை அடைவதற்கு நேரம் தவறாமையை கடைப்பிடியுங்கள்.
தொழில்
இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான பரிசோதனை காலமாக இருக்கலாம். வாடிக்கையாளர்களிடமிருந்து புதிய நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்கள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய நடப்பு தொழிலிலிருந்து பண வரவைக் காணலாம். நீங்கள் உங்களுடைய பொறுப்புகளில் தெளிவாக இருக்க வேண்டும். தொழில் நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக உங்கள் கூட்டாளிகளுக்கு சில பொறுப்புகளை வழங்குங்கள்.
தொழில் வல்லுநர்
இந்த மாதம், உங்கள் தொழில்முறை முன்னேற்றம் திருப்திகரமாக இருக்க வாய்ப்பில்லை. பணியிடத்தில் நீங்கள் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். பனியின் மீதான உங்களுடைய சிறந்த ஆர்வம் உங்கள் நிர்வாகத்தால் கவனிக்கப்படும். உங்கள் சக பணியாளர்களிடையே உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்களை நல்ல ஆலோசகராக நடத்துவார்கள். வரும் காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறுவீர்கள்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/mesham/
ஆரோக்கியம்
உங்கள் உடல்நிலை இந்த மாதத்தில் மிதமானதாக இருக்கும். சத்துள்ள உணவை உட்கொள்வதோடு உங்களை திடமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். நீங்கள் உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைச் சரிபார்க்க வேண்டும்.
மாணவர்கள்
இந்த மாதம், படிப்பில் உங்கள் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக உங்கள் பாடத்திட்டத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். உங்கள் படிப்பிற்கென போதிய நேரத்தை ஒதுக்குங்கள். குறைந்தபட்ச வருகை பதிவையாவது பராமரியுங்கள். ஏனெனில் நீங்கள் ஒழுங்காக வருகைப்பதிவை பராமரிக்காமல் இருப்பீர்கள்.
சுப தினங்கள்: 1, 7, 10, 11 18, 19, 21, 25, 28 மற்றும் 29
அசுப தினங்கள்: 8, 12, 16, 20, 22, 26 மற்றும் 27
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/mesham/