Skip to main content

Rishabam Oct Month Horoscope Predictions in Tamil 2018

இந்த மாதம் உங்கள் நிலுவையிலுள்ள வேலைகளை முடிப்பதற்கு ஒரு வலுவான காலமாக இருக்கும். உங்கள் தெளிவான நடவடிக்கைகள் சரியான முடிவுகளைக் கொடுக்கும். நீங்கள் புதிய பணிகளைத் தொடங்கலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையா சொத்து வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இருப்பினும், சொத்துக்களை வாங்குவதற்கு முன் ஆவணங்களைச் சரிபார்க்கவும். உங்கள் செயல்களில் விரைவான பலன் காண உங்கள் தொடர்பாடல் திறன் உதவிகரமாக இருக்கும். இந்த மாதம் பணி நிமித்தமான பயணங்கள் அதிகமாக இருக்கும். சில விஷயங்களில் உங்கள் மூத்தவர்களை நீங்கள் அவமதிக்க வாய்ப்புகள் இருப்பதால், உங்கள் மனநிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். இந்த மாதம் உங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.

காதல் / திருமணம்

இந்த மாதம் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. காதலர்கள் தங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தொடர்பபாடலை தொடர்ந்து மேற்கொள்வார்கள். சில பரிசுப் பரிமாற்றங்கள் இருக்கலாம், அவை உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். தம்பதிகள் சகஜமான நிலையில் மிக மகிழ்ச்சியோடு இருப்பார்கள். குடும்ப பணிகளில் அவர்கள் செலுத்தும் கவனம் அறிவார்ந்த நிலயில் காணப்படும். உங்களுடைய துணையின் தேவைகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/rishabam/

நிதி நிலைமை

உங்கள் நிதி தேவைகள் இந்த மாதம் நிறைவேறும். உங்கள் நண்பர்களிடமிருந்தும் நிதி உதவியைப் பெறுவீர்கள். சிறந்த வருமானத்திற்காகப் பாதுகாப்பான முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்ய சிறந்த நேரம் இது. செலவுகள் சாதாரணமாக காணப்படுகிறது. நீங்கள் அதனை சிறப்பாகக் கையாளுவீர்கள்.

வேலை

உங்கள் பணி வளர்ச்சிக்கு இது அனுகூலமான மாதம். சிறந்த முன்னேற்றத்திற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் தகுதியை நிரூபிக்க சில சவாலான பணிகள் கிடைக்கும். ஒரே நேரத்தில் அனைத்துப் பணிகளையும் செயல்படுத்துவதற்குப் பதில் ஒரு நேரத்தில் ஒரு பணியை முடியுங்கள். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/rishabam/

தொழில்

இந்த மாதம் உங்கள் பங்குதாரருடன் இணைந்து நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். செயல்படுத்துவதற்கு முன் தெளிவாக திட்டமிடுங்கள். உங்கள் பங்குதாரர்கள் அவர்களின் பணிகளை சிறப்பாக ஆற்ற அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். புதிய திட்டங்களில் உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

தொழில் வல்லுநர்

இந்த மாதம், நீங்கள் உங்கள் வேலைக்கான பாராட்டுதல்களை பெறுவீர்கள். எதிர்கால திட்டங்களை நீங்கள் கருத்தில் கொண்டு உங்களால் முடிந்த அளவு சிறந்தவற்றை வழங்க முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் நேரத்தில் உதவி புரியும் உங்கள் சக ஊழியர்களுடன் ஒரு நல்ல உறவைப் பராமரிக்கவும். உங்கள் நட்புணர்வு மேலதிகாரிகளையும் கீழ் பணிபுரிபவர்களையும் உங்கள் பக்கம் ஈர்க்கும்.

ஆரோக்கியம்

உங்கள் உடல்நிலை இந்த மாதம் மிக நன்றாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்திற்குச் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். உடற் பயிற்சிகள் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். தியானம் செய்வதன் மூலம் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி உங்கள் கவனத் திறனை அதிகரிக்க இயலும்.

மாணவர்கள்

மாணவர்கள் இந்த மாதம் ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள். இது அவர்களின் படிப்பில் பிரதிபலிக்கும். உங்கள் பாடத்திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் பெற்றோருடன் நீங்கள் பாசத்துடன் உறவை அனுபவித்து மகிழ்வீர்கள். அது உங்களைச் சுறுசுறுப்பாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கும்.

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/rishabam/

Popular posts from this blog

Balance Your Cosmos and Karma Planets are Here to Bless You

Cosmos and Human Destiny Astronomically speaking , the planets in our Solar System affect the Earth physically with their large electro-magnetic and gravitational field interactions. They have subtler influences as well. Astrologically , the planets or 'Grahas' are all forms of consciousness. Through their rotations, revolutions and transits through the constellations, they give rise to changes in our natural environment and our beings. Vedic Astrology or 'Jyotisha' is the oldest most time-tested system of astrology in the world. The Sanskrit word Jyotisha means "science of light." The origin of Jyotisha is from the Vedas, the Ancient Wisdom Texts. It is the science of understanding the subtle influences that come to us from the greater cosmos; more specifically the 9 planets that are said to influence the human destiny on Earth the most. Vedic Astrology recognises 9 Planets or 'Navagrahas' in particular; the Sun, the Moon, Mars, Mercury...

Kanni Rasi Palan Tomorrow கன்னி நாளைய ராசி பலன் - புதன், 31 அக்டோபர், 2018

கன்னி பொதுப்பலன்கள் இன்று மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு புதிய தொடர்புகள் ஏற்படும். விருந்து மற்றும் விழாக்களில் பங்கு கொண்டு மகிழ்வீர்கள். கன்னி வேலை / தொழில்: பணியிடச் சூழல் நீங்கள் திறம்படச் செயலாற்றுவதற்கு ஏற்ப மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு மதிக்கப்படும். கன்னி காதல் / திருமணம்: உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். இதனால் ஒருவரை ஓருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். கன்னி பணம் / நிதிநிலைமை: இன்று உங்களிடம் அதிக பணம் காணப்படும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதாக இருக்கும். கன்னி ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இன்று மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/kanni/

Positive shades of Sani Dev Sade Sati

Sani Dev Sade Sati The term ‘Sani Dev Sade Sati’ literally means ‘Lord Sani’s Seven and a Half’ and denotes the 7 ½ year period of Sani, the planet Saturn. While Saturn itself remains to be the feared planet, this period in particular is considered astrologically, as a time of trials and tribulations. This ‘difficult’ period begins when Saturn enters the zodiac sign that falls immediately before an individual’s sign of birth, and continues during the time when Saturn will transit that sign and also the next 2 signs. As Saturn remains in a sign for about 2 ½ years, it takes a total of 7 ½ years to cross over the 3 zodiac signs. For instance, if a person’s zodiac sign is Taurus as per the time of his or her birth, then Sade Sati period will begin for that individual, every time Saturn enters the previous sign of Aries, and will continue for the time when Saturn transits through the next 2 signs of Taurus and Gemini. Thus, a Sade Sati period consists of 3 phases of 2 ½ years each. ...