பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்களுக்குக் கலவையான பலன்கள் கிடைக்கும். தவறான எண்ணங்களைத் தவிர்க்கவும். உங்களுடைய பொதுவான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். பணிகளில் உங்களுடைய சிறப்பம்சம் உங்களுக்கான தனி அடையாளத்தைக் கொடுக்கும். இந்த மாதம் சிறிய மற்றும் நீண்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், இந்த மாதம் ஒரு வளமான நிதிநிலைமை காணப்படும். சொத்துக்கள் வாங்குவதால் அளவு கடந்த திருப்தி ஏற்படும். உங்கள் சமூக வட்டத்தில் உள்ள சிலர் தேவையான நேரத்தில் உங்களுக்கு உதவலாம்.வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். நீங்கள் சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். இந்த மாதம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
காதல் / திருமணம்
இந்த மாதம் காதல் உறவுக்குச் சிறப்பானதாக இருக்கும். உங்கள் துணையுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் போது தெளிவாக இருங்கள். குடும்ப வாழ்வில் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் முறையான பலன்களைத் தராமல் போகலாம். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண தம்பதிகள் போராடுவார்கள். உங்களுடைய உணர்வை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் துணை உங்களுடைய அன்பைப் புரிந்து கொள்ள முடியும்
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/kanni/நிதி நிலைமை
இந்த மாதம் நிதியைப் பொறுத்தமட்டில் நன்றாக இருக்கும். உங்களது நிதி நிலைமை மெதுவாகவும் திறம்படவும் முன்னேறும். உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்குப் பதிலாக உங்கள் குடும்பத்தாரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஒவ்வொரு செலவும் சிறியதாகவும் நியாயமானதாகவும் காணப்படும் போதிலும் தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும்.
வேலை
வேலையில் ஏற்படும் முன்னேற்றத்தால் இந்த மாதம் நீங்கள் திருப்தியோடு இருப்பீர்கள். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். உங்கள் முதலாளி ஒப்படைத்த வேலைக்கே முன்னுரிமை கொடுங்கள். உங்கள் சக ஊழியர்களுடன் ஒரு நட்பு சூழ்நிலையை உருவாக்குங்கள். பணியிடங்களில் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்களே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த மாதம் நேரம் தவறாமையை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும்
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/kanni/தொழில்
உங்கள் வியாபாரத்தில் நீங்கள் அடையும் வெற்றி உங்களுக்கு ஆத்ம திருப்தி அளிக்கும். இந்த மாதம் நெடுநாளாக நீங்கள் விரும்பிய சில ஆசைகள் நிறைவேறும். உங்கள் கூட்டாளர்களுக்கு உதவுங்கள். ஏனெனில் அவர்கள் பல பிரச்சினைகள் காரணமாக கவலையோடு இருக்கலாம். உங்கள் நிர்வாக செலவுகளை கண்காணியுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவு உங்கள் உள்ளார்ந்த தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
தொழில் வல்லுநர்
தொழிலில் சகஜமான ஸ்திரத்தன்மை காணப்படும். உங்கள் முந்தைய வேலைக்கான முடிவுகளை அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். பணியில் கடுமையான சூழ்நிலைகளின் போது உங்களுக்கு முறையாக வழிகாட்டும் மேலதிகாரிகளுடன் நட்போடு இருங்கள்.. உங்கள் சக ஊழியர்களை ஆதரியுங்கள். அவர்கள் ஒருவேளை இடர்பாட்டில் இருக்கக் கூடும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/kanni/ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கிய நிலை நன்றாக இருக்கும், நீங்கள் கவலைப்படும் படி எந்த ஒரு பெரிய பிரச்சினைகளும் இருக்காது. உங்கள் வேலையில் பொறுமையோடு இருங்கள். உங்கள் தகவல் தொடர்பில் கவனமாய் இருங்கள். உங்கள் இரத்த அழுத்தத்தைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மன அமைதியும் ஆற்றலையும் பெறுவதற்கு உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வையுங்கள்
மாணவர்கள்
உங்கள் கல்வியில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். திட்டங்களில் உங்கள் புதுமைகளை செயல்படுத்த இதுவே தகுந்த நேரம். உங்களின் பரந்த அனுபவமும் அறிவும் உங்கள் கல்வியில் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை அளிக்கும். வெளிநாடுகளில் உயர் கல்வியைப் தொடர நினைக்கும் உங்கள் கனவு திறம்பட செயல்படும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/kanni/